கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (நூல்)
Appearance
கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் | |
---|---|
நூல் பெயர்: | கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் |
ஆசிரியர்(கள்): | கோ.மு.முத்துசாமிபிள்ளை |
வகை: | சமயம் |
துறை: | சைவம் |
இடம்: | தஞ்சாவூர் 613 001 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 64 + xiv |
பதிப்பகர்: | தமிழ்ப்பல்கலைக்கழகம் |
பதிப்பு: | 1992 |
கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களில் ஒன்றாகும் [1].
அமைப்பு
[தொகு]கும்பேசுவரர் பெயர் விளக்கம், கோயில் அமைப்பு, கும்பேசுவரரை வழிபட்டவர்கள், கோயிலிலுள்ள மூர்த்தங்கள், தீர்த்தங்கள், கோபுரங்கள், மண்டபங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள், நாயன்மார்கள் அருளிய தேவாரப்பதிகங்கள் மற்றும் மகாமகத்திருவிழாவோடு தொடர்புடைய நவகன்னியர், மகாமக தீர்த்தங்கள் அளிக்கும் பலன்கள் என்ற பல்வேறு தலைப்புகளைக் கொண்டு கோயிலின் பெருமையையும், மகாமகத்தின் பெருமையையும் உணர்த்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. கும்பகோணத்திலுள்ள 59 கோயில்களின் பட்டியல் இந்நூலில் உள்ளது.
உசாத்துணை
[தொகு]'கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும்', நூல், (1992; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்ப்பல்கலைக்கழக நூற்பட்டியல்